கொரோனா வைரஸில் இருந்து நம்மை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
தற்போது உலக நாடுகளை அதிக அளவில் அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் என்றால் அது கொரோனா வைரஸ் தான். இது தற்போது இந்தியாவிலும் பரவி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வைரஸில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பின்வருமாறு காணலாம்,
தொடர்ந்து நமது கைகளை சோப் மற்றும் நீரைக்கொண்டு நன்கு கழுவிக் கொண்டே இருக்க வேண்டும். கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரை உபயோகிக்க வேண்டும். ஏனெனில் இது காற்றின் மூலம் எளிதாக பரவக்கூடியது என்பதால் இவ்வாறு செய்ய வேண்டும்.
பெரும்பான்மையான நேரங்களில் முகத்தில் கவசம் அணிந்து கொள்வது நல்லது. அது மூக்கையும், வாயையும் மூடியவாறு இருக்க வேண்டும். ஆறடி தூரத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர் தும்மினாலோ, இருமினாலோ தொழில்கள் மூலம் எளிதில், நொடிப்பொழுதில் மற்றவருக்கு இந்த நோய் பரவும் என்பதை சீனாவின் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.