Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

4 கிரவுண்ட் நிலத்தை அபகரிக்கும் முயற்சியில்…. சிக்கிக்கொண்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்…. போலீஸ் அதிரடி….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேங்கிகால் பகுதியில் வசித்து வரும் சுபாஷினி என்பவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அழுத்துள்ளார். இந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது பல்லாவரம் பகுதியில் எங்களுக்கு சொந்தமான 4 கிரவுண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்பு விலைக்கு வாங்கி அதில் சுற்றுச்சுவர் கட்டி பராமரித்து வருகின்றோம். இந்த நிலையில் கீழக்கட்டளையில் உள்ள ஏழுமலை என்பவர் நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தில் சுற்றுச்சுவரை இடித்து வேறொரு இரும்பு வேலியை போட்டு உரிமையாளர்களான எங்களையும் அதற்குள் செல்ல விடாமல் தடுத்து வருகின்றார்.

இது குறித்து ஏழுமலையிடம் நாங்கள் நேரில் சென்று கேட்டபோது அவர் எங்களை தகாத வார்த்தையால் திட்டி தீர்த்துள்ளார். மேலும் இனிமேல் நிலத்தை கேட்டு வந்தால் உயிரோடு விடமாட்டேன் எனவும் மிரட்டினார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக பல்லாவரம் உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கி ஏழுமலையை கைது செய்தனர்.

இந்த விசாரணையில் கைது செய்யப்பட்ட ஏழுமலை வல்லம் பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். மேலும் அவர் கீழக்கட்டளையில் திருமண மண்டபம் நடத்தி வந்துள்ளார். இந்த மண்டபத்திற்கு அருகில் உள்ள நிலத்தை அவர் ஆக்கிரமிப்பு செய்து கார் நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளார். இதனை நிலம் உரிமையாளர் தட்டிக் கேட்டபோது அவர்களை மிரட்டியதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட ஏழுமலையை போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |