கொரோனா வைரஸை 20 நொடிகளில் கண்டறியும் விதமாக செயற்கை நுண்ணறிவு கருவியை அலிபாபா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
அலிபாபா நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவு கருவி ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளது. இந்த கருவி மூலம் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை வெறும் 20 நொடிகளில் 96% கண்டுபிடித்துவிடலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட மருத்துவ அமைப்புகள் இந்த கருவியை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.