தமிழகம் முழுவதும் சட்டம் விரோதமாக செயல்பட்டு வந்த 8 போலி வங்கிகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. போலியான வங்கி தொடங்கி அதன் மூலமாக விவசாயிகள் மற்றும் தொழில் தொடங்குபவர்களை ஒரு கும்பல் ஏமாற்றி வருவதாக ஆர்பிஐ உதவி பொது மேலாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னை மத்திய பிரிவு , வங்கி மோசடி புலனாய்வுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தமிழகத்தில் மதுரை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், ஈரோடு ,நெல்லை, சேலம் உள்ளிட்ட மாநிலங்களில் போலி வங்கிகள் செயல்பட்டதாக காவல் ஆணைய சங்கர் ஜவால் தெரிவித்துள்ளார். ஐசிஐசிஐ வங்கியின் டெபிட் கார்டை வாங்கி போலியான வங்கி டெபிட் கார்டாக மோசடிக்காரர்கள் கொடுத்ததாகவும் அவர்களிடமிருந்து 56 லட்சம் பணத்தை முடக்கி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.