Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டு தொலைந்து விட்டதா?…. E- Aadhaar கார்டு பதிவிறக்கம் செய்வது ரொம்ப ஈஸி…. இதோ எளிய வழி….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளதால், இந்த ஆதார் கார்டை பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ஆதாரில் உங்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுவதால் ஒருவேளை உங்களின் ஆதார் கார்டை நீங்கள் தொலைத்து விட்டால் கவலைப்பட வேண்டாம். ஆன்லைன் மூலமாக எளிதில் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வதற்கு 12 இலக்க ஆதார் எண் அல்லது 28 இலக்க பதிவு அடையாள எண் வைத்திருக்க வேண்டும்.

அப்படி ஆதார் எண் இல்லை என்றால் உங்களால் சுலபமாக இ ஆதாரை பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் இதற்கு நீங்கள் Enrolment ID- ஐ மீட்டெடுக்க வேண்டும். அதற்கு aadhaar அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று Get ஆதார் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு enrollment ID Retrieveஎன்பதை கிளிக் செய்து விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்தவுடன் ஓடிபி கொடுக்க வேண்டும். பின்னர் அதனை பதிவு செய்தால் உங்களுக்கு ஐடி கிடைத்து விடும்.

அடுத்ததாக ஆதார அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் டவுன்லோட் ஆதார் என்பதை கிளிக் செய்து ஆதார் நம்பர் மற்றும் ஐடி உள்ளிட வேண்டும். பின்னர் ஆதாரருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்ட உடன் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வந்தவுடன் அதனை உள்ளிட்டு verify and download என்பதை கிளிக் செய்ய வேண்டும். இறுதியாக உங்களின் இ ஆதார் பதிவிறக்கம் செய்ய தொடங்கப்படும். இதனை நகலெடுத்து நீங்கள் பயன்படுத்தலாம்.

Categories

Tech |