டெல்லியில் காவலரை துப்பாக்கி காட்டி மிரட்டிய ஷாருக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கடுமையான கலவரத்தின் போது ஒருவர் துப்பாக்கியை காட்டி போலீஸ் வீரர் ஒருவரை மிரட்டும் காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது. இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நபர் யார் யார் ? எப்படி இவ்வளவு தைரியமாக துப்பாக்கியை காட்டி போலீஸாரை மிரட்டினார். அந்த துப்பாக்கியை பயன்படுத்தி வேறு யாரையும் தாக்கினாரா ? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன நிலையில் அவர் பெயர் ஷாருக் என்ற தகவல் வெளிவந்தது.
இதையடுத்து போலீசாரின் விசாரணையில் அவருடைய குடும்பத்திற்கு குற்றப்பின்னணி இருப்பதும் தெரியவந்தது. ஷாருக்கின் தந்தை போதை மருந்து வியாபாரம் தொடர்பான ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் என்றும் , ஷாருக்கின் உறவினர் ஒரு வன்முறை கும்பலுக்கு தலைவர் என்றும் போலீசாருக்கு தெரியவந்தது. ஷாருக்கை கைது செய்ய முடியாமல் போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி போலீஸ் , உத்தரபிரதேச போலீஸ் இணைந்து பரேலி நகரில் இருந்த அவரை கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஷாருக் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 307 (கொலை முயற்சி), 186 (அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல்) மற்றும் ஆயுதச் சட்டப் பிரிவு 353இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடந்த விசாரணையில் டெல்லி வன்முறையின்போது காவலர்களுக்கு எதிராக ஆத்திரத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் மீது எவ்வித குற்றப் பின்னணியும் இல்லையென்றும் சொல்லப்படுகின்றது.