விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜி பி முத்து, அசல், சாந்தி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினார்கள். மீதமுள்ள போட்டியாளர்கள் சண்டை சச்சரவுகளோடு விளையாட்டை விளையாடுகிறார்கள். இதில் தனலட்சுமி அனைத்து போட்டியாளர்களோடும் சண்டையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கின் போது தனலட்சுமிக்கும் – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டனுக்கும் இடையே பெரும் கலவரமே வெடித்துள்ளது. தனலட்சுமியின் கையில் இருந்த பொருளை மணிகண்டன் பிடுங்கியதால் தொடங்கிய வாக்குவாதம் பெரும் ரகளையாகியுள்ளது. ஒரு வாரம் அமைதியாக இருந்த பிக்பாஸ் வீடு மீண்டும் போர்க்களமாக மாறியுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.