இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, இந்திய துணை கண்டத்தில் எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத துணைச்சல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக விளங்கிக் கொண்டிருக்கின்ற நம்முடைய தளபதி அவர்களுக்கு இருக்கின்றது என்று சொன்னால், இந்த இயக்கத்தினுடைய அடித்தளம் அசைக்க முடியாததாக, ஆட்டிப் பார்க்க முடியாததாக, வலிமை உடையதாக இருக்கிறது என்கின்ற அடிப்படை காரணம் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள்.
நம்முடைய இயக்கத்திற்கு இருப்பதைப் போன்ற ஒரு அடித்தளம், நம்முடைய வலிமை, இந்திய துணை கண்டத்தில் எந்த ஒரு இயக்கத்திற்கும் கிடையாது. அதுதான் நமக்கு பெருமை என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தாக வேண்டும். இன்றைக்கு இந்தி திணிப்பு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வகையிலே வந்தாலும் அதை எதிர்ப்பதற்கு, எதிர்த்து குரல் கொடுப்பதற்கு இந்தியாவிலேயே முதல் குரல் எழுப்புவதற்கு தயாராக ஒரு இயக்கம் இருக்கிறது, ஒரு தலைவர் இருக்கிறார் என்று சொன்னால், அது நம்முடைய தலைவர் தளபதி அவர்கள்தான்…
அதனால் தான் எல்லோரும் இன்றைக்கு தங்களுடைய தாய்மொழியை காப்பாற்றுவதற்கு தமிழ் மொழி காவலனாக விளங்கிக் கொண்டிருக்கின்ற தலைவன் தளபதி இருக்கிறார், நிச்சயமாக அவர் தமிழ் மொழியை காப்பாற்றுவதை போல நம்முடைய தாய் மொழியையும் காப்பாற்றி தருவார் என்கின்ற நம்பிக்கையை இந்திய துணை கண்டத்திலேயே உருவாகி இருக்கின்ற ஒரு தலைவன் நம்முடைய தளபதி அவர்கள்.
இன்றைக்கு எல்லோருமே ஆங்கிலம் வேண்டும் என்று சொல்கிறோம். யாருமே இந்தியை வேண்டுமென்று சொல்லவில்லை, விரும்பவில்லை. மத்திய அரசுக்கு அனுப்பப்படுகின்ற கடிதங்கள் எல்லாம் இன்றைக்கு ஹிந்தியிலே மொழிமாற்றம் செய்யப்பட்டு அனுப்பப்படக்கூடிய ஒரு சூழ்நிலை தானே உருவாகி இருக்கிறது என தெரிவித்தார்.