Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாமல்லபுரத்தை சுற்றி பார்த்த வாலிபர்கள்….. விபத்தில் சிக்கி மாணவர் பலி; நண்பர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் விஷ்ணுவரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஷ்ணுவரதன் தனது நண்பரான சவுத்ரி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் நகரை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளார். இருவரும் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வடநெம்மேலி பகுதியில் வைத்து சாலையின் குறுக்கே வந்த பசுமாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

மேலும் அவ்வழியாக வேகமாக வந்த கார் விஷ்ணுவரதன் மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சவுத்ரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |