Categories
சினிமா தமிழ் சினிமா

“ரத்தத்தில் காதல் கடிதம்”…. கொரியரில் நிர்வாண புகைப்படங்கள்….. ரசிகரால் உருக்குலைந்துப் போன‌ கேஜிஎஃப் பட நடிகை…..!!!!!!

தமிழ் சினிமாவில் சாது படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரவீனா தாண்டன். அதன் பிறகு கமலஹாசனின் ஆளவந்தான் படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற கேஜிஎஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்கிறார். இந்நிலையில் தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை ரவீனா தாண்டன் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் முன்னணி நடிகையாக உச்சத்தில் இருந்த போது என்னை பார்க்க வீட்டில் முன்னால் நிறைய ரசிகர்கள் காத்திருப்பார்கள். அவர்களின் ஒரு ரசிகர் என் மீது பைத்தியமாகவே இருந்தார். ரத்தத்தினால் காதல் கடிதம் எழுதி அனுப்புவார். பரிசுப் பொருட்கள் அனுப்புவார். நிர்வாண படங்கள், வீடியோக்களையும் கொரியரில் அனுப்பி வைப்பார். எங்கள் வீட்டு கேட் அருகில் மணிக்கணக்காக காத்து நிற்பார். ஒருநாள் குடும்பத்தினருடன் வெளியே செல்லும்போது காரை நிறுத்தாததால் கார் மீது கல் வீசினார். உடனே நான் போலீசில் புகார் அளித்தேன். அதை இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |