Categories
மாநில செய்திகள்

ரோட்டுல போக முடில..! கொஞ்சம் கூட பயம் இல்லை… தமிழக போலீசுக்கு பாஜக திடீர் சப்போர்ட் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மதுரையில் கல்லூரி முன்பு மாணவர்கள் செய்த அராஜக வீடியோ காட்சியை பார்க்கும் பொழுது நமது சமுதாயம் எந்த அளவுக்கு கெட்டுப் போய் இருக்கு அப்படிங்கறது அந்த வீடியோ காட்சி பார்க்கும் போது தெரிகிறது. பயம் கிடையாது. துணிவாக ரோட்ல இருக்காங்க. காவல்துறையின் மீது எள்ளளவு கூட பயமில்லை. ஒரு பெண்ணை மிக தவறாக பொதுஇடத்தில் அத்தனைபேருக்கும் முன்னாடி அந்த கயவன், மாணவன் என்கின்ற போர்வையில் நடந்து கொள்கிறார்கள்.

அதன்பின்பு காலேஜ்குள்ள போய் சண்டை…  அந்த மாணவியனுடைய தந்தையை போய் அடிக்கிறாங்க. இதனால் நேரடியாக ஒரே ஒரு விஷயத்தை நாம என்ன சொல்றோம், அப்படினா…  இது புதிதல்ல,  அப்பப்ப நம்ம பார்த்துகிட்டே இருக்கின்றோம்.  எந்த அளவுக்கு சட்டத்தின் மீது சில கயவர்களுக்கு மரியாதை இல்லை என்பதை இந்த நிகழ்ச்சி   வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.

சில நேரத்தில் காவல்துறை கடுமையாக தான் இருக்கணும். பாரதிய ஜனதா கட்சி காவல்துறையினர் கடுமையாக்கும் போது கூட இருப்போம். காவல்துறை கடுமையாச்சுனா அதுக்கு ஒரு குரூப்…  ஐயோ காவல்துறை ஏன் கடுமையா நடந்துக்கிறாங்க? கடுமையா நடந்துக்க கூடாது அப்படின்னு… மனித உரிமை மீறல் என ஒரு குரூப் வருவாங்க. இந்த விஷயத்தில் காவல்துறை கடுமையாக இல்லை என்றால்,  நாளைக்கு நீங்களும், நாங்களும்,  சாமானிய பெண்கள் கூட ரோட்டில் நடந்து செல்ல முடியாது. அதனால எங்களுடைய ஒரே கோரிக்கை காவல்துறை சில இடங்களில் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |