Categories
தேசிய செய்திகள்

போலி அனுபவத்தை பயன்படுத்தி பணியில் சேர்ந்த ஊழியர்கள்….. ஐடி நிறுவனங்களின் அதிரடி நடவடிக்கை….!!!!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தின் போது பொதுமுடக்கம் ஏற்பட்டதால் ஐடி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க ஆரம்பித்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் சில நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சிலர் போலியான அனுபவத்தை பயன்படுத்தி ஐடி துறைகளில் வேலைக்கு சேர்வதாக தற்போது புதிய புகார்கள் எழுந்துள்ளது.

இதனால் போலியான அனுபவத்தை பயன்படுத்தி வேலைக்கு சேருபவர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஐடி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் Accenture நிறுவனம் போலி அனுபவத்தை பயன்படுத்தி வேலைக்கு சேர்ந்தவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் நிறுவனத்தில் சரியான நெறிமுறைகளை பின்பற்றுவதாகவும், தங்களுடைய அலுவலகத்தில் போலி வேலை வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையாக அணுகுமாறும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |