Categories
தேசிய செய்திகள்

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய டெல்லி…. இன்று முதல் பள்ளிகள் திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி தீபாவளி பண்டிகை முன்னிட்டு காற்று மாசு அதிகரித்தது. அதிலும் வியாழக்கிழமை முதல் காற்றின் தரக்கூடிய 450 வரை எட்டி, சுவாசிக்க தகுதியற்றவை என்ற நிலையை அடைந்தது. காற்று மாசினை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகின்ற நிலையில் காற்றின் தரம் மேம்படும் வரையில் டெல்லி 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல்  50% அரசு ஊழியர்கள் காற்று மாசு குறையும்  வரை வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்று  அரசு அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதன் காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 5 நாட்களாக வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி கற்று வந்த நிலையில், இன்று மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பி உள்ளனர். அதனைப் போல அரசு ஊழியர்களும் மீண்டும் அலுவலகம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசிற்கு அண்டை மாநிலத்தில் பயிர் கழிவுகள் எச்சரிக்கப்படுவதும், டெல்லியில் தனியார் வாகனங்களில் பயன்பாடு அதிகரிப்பும் காற்றின் மாசு அதிகரிப்புக்கு காரணமாகும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |