கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகின்ற 16ஆம் தேதி திறக்கப்படுகிறது. இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் பத்தனம் திட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பிரசாதம் அப்பம், அரவணை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி அரவணை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரவணை நிரப்பப்படும் டின்கள் வெளியிடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த டின்களை திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கேரளாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தொழிற்சாலை தொடங்குவது குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி டின்கள் தேவைப்படுவதால் சொந்தமாக அதனை தயாரித்தல் செலவு குறைய வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மண்டல, அகர விளக்கு சீசன் தொடங்குவதற்கு முன்பதாக 15 லட்சத்தில் அரவணை தயார் நிலையில் இருப்பு வைக்கப்படும். அதனை போல அப்பம் தயாரிக்கும் பணி வருகின்ற 11 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அரிசி, சக்கரை உள்ளிட்ட பொருட்களை சன்னிதானத்திற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இதனையடுத்து சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் பதிவு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நிலக்கல் உள்ளிட்ட 13 இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு மையங்கள் தொடங்கப்படும். இதனை தவிர பாலக்காடு, கண்ணுரியிலும் முன்பதிவு மையங்கள் சீசனுக்கு முன்னதாக தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.