தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. பொதுவாக சுந்தர் சி படம் என்றால் அதில் கலகலப்புக்கும் திரில்லிங்குக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் சுந்தர் சி தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், பிரதாப் போத்தன்,யோகி பாபு, ரைசா வில்சன், சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த படம் கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில், நெகட்டிவ்வான விமர்சனங்கள் வருகிறது. இந்த படம் தற்போது வரை 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள காபி காதல் திரைப்படம் குறைந்த அளவு வசூல் சாதனை புரிந்திருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.