Categories
உலக செய்திகள்

போலீஸ் ஸ்டேஷன் போட்ட சீனா..! கனடா தேர்தலில் தலையீடு… கடுப்பில் ட்ரூடோ ..!!

ஐரோப்பிய நாடுகளில் சீனா சட்ட விரோதமாக காவல் நிலையங்களை அமைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான‌ நிலையில் கனடாவிலும் அதேபோல் சட்டவிரோதமான காவல் நிலையங்களை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனடா தேர்தலில் சீனா குறுக்கீடு செய்ய முயற்சி செய்வதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது பற்றி அவர் பேசிய போது,

சீனாவின் சட்டவிரோதமான காவல் நிலையங்கள் பற்றி நடத்தப்பட்ட விசாரணையின் போது கனடாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் சீனா தலையிட முயற்சி செய்ததை உளவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர். அரசியல் வட்டங்களுக்குள் செல்வாக்கு பெறுவதற்காக சீனா தனக்கு ஆதரவான வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் ஆளும் லிபரல் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி போன்ற இரு முக்கிய அரசியல் கட்சிகளையும் குறிவைத்து இந்த குறுக்கீடு முயற்சி நடைபெற்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நமது தேர்தல் செயல்முறைகள் மற்றும் அமைப்புகளின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த நாம் குறிப்பிடத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றோம். மேலும் தேர்தல் குறிக்கீடுகளுக்கு எதிரான போராட்டத்தில் நமது ஜனநாயகம் மற்றும் நிறுவனங்களின் வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக செயல்படுவோம் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |