காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி சொன்ன பரபரப்பு வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் மூறியன்கரை பகுதியைச் சேர்ந்த ஷாரோராஜ்(23) என்பவரும், குமரி மாவட்டம் ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா(22) என்பவரும் காதலித்து வந்த நிலையில் கிரீஷ்மாவிற்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே கிரீஷ்மா, ஹாரோன்ராஜை வீட்டிற்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்தால் அவருடைய உடல் நலம் மோசம் அடைந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கிரீஷ்மா அட்டைகுளங்கரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து நெய்யாற்றங்கரை மாஜிஸ்திரேட் கோட்டில் கிரீஷ்மாவை போலீசார் ஆஜர் படுத்திய போது ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது.
மேலும் விசாரணை நடைமுறை மற்றும் கொலை நடந்த இடத்திற்கு கிரீஷ்மாவை அழைத்து சென்று விசாரணை நடத்தும் போது அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் எனவும், அதனை சீலிட்ட கவரில் வைத்து கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் ஷாரோனின் கல்லூரி அமைந்திருக்கின்ற நெய்யூர் பகுதிக்கு கிரீஷ்மாவை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, இரண்டு மாதங்களில் காதலன் ஷாரோனை 10 முறை கொல்ல முயற்சி செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார், இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.