கூகுள்மேப் பல்வேறு அப்டேட்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. இதனிடையில் கூகுள் மேப்பில் பல பேருக்கும் தெரியாத ஆப்ஷன்களானது இருக்கிறது. அதுகுறித்து இங்கே காண்போம்.
# ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போக ஏராளமான மக்கள் கூகுள்மேப் செயலியை பயன்படுத்துகின்றனர். எனினும் இது பயனாளர்களுக்கு இடையே பல்வேறு நிறுத்தங்களைச் சேர்த்து சிறந்த வழியை பரிந்துரைக்கவும் அனுமதிக்கிறது என்பது ஏராளமான மக்களுக்குத் தெரியாது. அதன்படி நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் போக வேண்டும், ஆனால் வழியில் எங்காவது நிறுத்தவேண்டும் எனில் அதனை கூகுள் மேப்ஸில் சேர்க்கலாம்.
# இவ்வழியில் நீங்கள் விரும்பும் பல்வேறு நிறுத்தங்களைச் சேர்க்கலாம். இதனைச் செய்ய லொகேஷனை தேடி, டைரெக்ஷன்ஸ் என்பதை டேப் செய்யவேண்டும். தற்போது மேல் வலதுபுறத்திலுள்ள 3 புள்ளிகளைத் தட்டி “Add stops” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
# சாலை வழியே போகிறீர்கள் எனில் அவ்வழியில் நீங்கள் செலுத்தவேண்டிய சுங்கசாவடிகளின் மொத்த கட்டண விபரத்தை கூகுள் மேப்ஸ் காண்பிக்கும். இதற்கு செட்டிங்சிலிருந்து ஷோ டோல் ப்ரைசஸ் என்ற ஆப்ஷனை தேர்வுசெய்யலாம்.
# பிளஸ் குறியீடு என்பது உங்களது இருப்பிடத்தின் உண்மையான முகவரியை ஒருவருடன் பகிராமல் இருப்பதற்குரிய மாற்றுவழியாகும். பிளஸ் குறியீட்டை உருவாக்குவது எளிதாகும். இவை வெவ்வேறான வாயில்கள், நுழைவுப்புள்ளிகள் மற்றும் குறிப்பிட்ட இடத்தை காண்பிக்க அனுமதிக்கிறது.
# ஏராளமானோர் வண்டியை எங்கு பார்க் செய்தோம் என்பதனை மறந்துவிடுகின்றனர். இதற்கு உங்களுக்கு கூகுள்மேப் உதவுகிறது. உங்களது பார்க்கிங்கைக் காட்டும் நீலநிற ஐகானைத் தட்டி, பாப்அப் மெனுவில் இருந்து பார்க்கிங்கைச் சேமிக்க வேண்டும்.
# நாம் போகக்கூடிய (அ) செல்லத் திட்டமிடும் இடத்திற்குரிய பார்க்கிங் நிலையை கூகுள் மேப்ஸ் நமக்கு காண்பிக்கும். இதற்கு லொகேஷனை தேடி டீட்டெயில்ஸ் பக்கத்தினை விரிவுபடுத்தி “P” ஐகானைத் தேர்வு செய்து பார்க்கலாம்.