வீட்டு வசதி வாரியத்தில் முறைக்கேடாக வீடு ஒதுக்கீடு செய்த வழக்கில் ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது மட்டுமின்றி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட் மனைவியின் சொத்துகளையும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் சங்கரின் சொத்துகளையும் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மொத்தமாக 14.23 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. ஜாபர்சேட் உளவுத்துறை ஐஜியாகவும், ராஜமாணிக்கம் CM-இன் முன்னாள் தனி செயலாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
Categories