செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மிசாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாண்புமிகு தளபதி அவர்களுடைய ஆணைக்கிணங்க 2021-22 ஆம் ஆண்டு மின்சார துறையினுடைய மானிய கோரிக்கையில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் உடைய திருகரங்களால் மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகளை வழங்கி, ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு என்ற பெரிய வரலாற்று சிறப்புமிக்க அந்த பணிகளை, ஆறு மாதத்தில் நிறைவு செய்து,
இதே அரங்கத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய திருகரங்களால் ஒரு லட்சம்மாவது விவசாயிகளுக்கான மின் இணைப்புக்கான உத்தரவை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக 2022-23-ஆம் ஆண்டில் 50,000 விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று ஒரு மகத்தான அறிவிப்பு மாண்புமிகு முதலமைச்சர் உடைய ஆணைக்கிணங்க, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டன.
சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட 50 ஆயிரம் விவசாயிகளுக்கான மின் இணைப்பு வழங்கக்கூடிய சிறப்பு வாய்ந்த திட்டத்தை, வருகின்ற 11.11 2022 ( இன்று ) கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தடாகவியல் பகுதியில் காலை 10 மணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் உடைய திருகரங்களால் 50 ஆயிரம் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கக்கூடிய ஒரு மகத்தான திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கின்றார்கள்.
இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தின் மூலமாக ஏற்கனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கான மின் இணைப்பு, இப்பொழுது 50 ஆயிரம் விவசாயிகளுக்கான மின் இணைப்பு என ஒட்டு மொத்தமாக ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கான மின் இணைப்பை மாண்புமிகு முதலமைச்சர் உடைய நல் உத்தரவோடு, ஆசியனோடு, ஆணைக்கிணங்க விவசாயிகளுக்கு வழங்கி ஒரு மகத்தான சாதனையை மின்சார வாரிய நிகழ்த்தி வருகிறது. தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், அதை நிறைவேற்ற கூடிய வகையில் வருகின்ற 11ஆம் தேதி ( இன்று ) மாண்புமிகு முதலமைச்சர் உடைய திருகரங்களால் இந்த இலவச மின் இணைப்பு வழங்கக்கூடிய திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது என தெரிவித்தார்.