Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்களுக்கு எதிரான ”அயோக்கியன்”…. வார்த்தையை விட்ட வேலூர் இப்ராஹிம்… கடும் கோபத்தில் விடுதலை சிறுத்தைகள்..!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் வேலூர் இப்ராஹிம், 10.5 % உயர் வகுப்பினருக்கான பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான  இட ஒதுக்கீடு என்பது பிராமண சமூகத்திற்கு மட்டுமல்ல. இதில் 40க்கும் மேற்பட்ட சாதியினர் வருகிறார்கள். ஜாதி ரீதியாக உயர்வகுப்பு என்று சொன்னதினால்,  அவர்கள் எப்பொழுதும் நலிந்து தான் இருக்க வேண்டுமா ? அவர்களுக்கு அரசு உதவி செய்ய கூடாதா ? என்கின்ற நியாயமான கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. பிராமணர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் ஏன் சிறுபான்மையினருக்கு செய்யவில்லை ?

என்று அவர்கள் தவறாக திசை திருப்புவார்களே ஆனால்,  அது பொய்யான தகவல். சிறுபான்மையின மக்களுக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து கொண்டு வருகிறது. திருமாவளவன் அவர்களை பொறுத்தவரை,  அரசியல் ஆதாயத்திற்காக இஸ்லாமியர்களை காப்பதற்காக இஸ்லாமியர்கள் உடைய காவலன் என்று வேஷம் போடுவார்.

கிறிஸ்தவர்களை காப்பதற்காக கிறிஸ்தவர்களின் காவலன் என்ற வேஷம் போடுவார். இப்பொழுது முழுக்க முழுக்க அவர் இந்து விரோத கருத்துக்களை சொல்லி வருவதனால்,  அவர் இந்துக்களுக்கான எதிரி என்பது வெளிப்படையாகவே எல்லோருக்கும் தெரிகிறது. நான் ஒரு புரட்சி செய்கிறேன். இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். அப்படின்னு சொல்லி போலி நாடகத்தை இவர் அரங்கேற்றி இருக்கிறார்.

கடவுளை கற்பிப்பவன் முட்டாள் என்று சொல்லக்கூடிய ஈவேரா கொள்கையை கொண்டவர் தான் திருமாவளவன். அவர் எப்படி இந்து மக்களின் நம்பிக்கைக்கு  புரட்சி செய்ய முடியும். அவர் அந்த புரட்சிக்கான தகுதியான ஆள் கிடையாது. முழுக்க முழுக்க திருமாவளவன் போன்ற அயோக்கியர்களை,  இந்து சமூகம் ஒதுக்கி விட்டது என்பதை நாங்கள் வெளிப்படையாகவே பதிவு செய்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |