சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலின் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசப்பிணைப்புகென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் காவியா அறிவுமதி.
இவர் இந்த சீரியலில் இருந்து விலகிய காரணத்தால் தற்போது ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் கதாநாயகி நடித்து வருகிறார். இதனையடுத்து சீரியலில் இருந்து விலகிய காவியா படத்தில் நடிக்கப் போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இவருக்கு பட வாய்ப்பு கிடைத்த காரணத்தால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்து விலகியுள்ளார்.
இவர் தற்போது பரத், வாணி போஜன் நடிக்கும் ”மிரள்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவியா பகிர்ந்துள்ளார். இயக்குனர் சக்திவேல் இயக்கும் இந்த திரைப்படம் வெறும் 20 நாட்களிலேயே எடுத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்கள் இவரை ”குட்டி நயன்தாரா” எனவும் புகழ்ந்து தள்ளுகின்றனர்.