இங்கிலாந்து அணியில் மலான் மற்றும் மார்க் வுட் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் மாற்று வீரராக இவர்களை களமிறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். இதற்கிடையே இந்தியா – பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலை தளங்களில் கூறி வருகின்றனர். அதேபோல சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இதைத்தான் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டியளித்துள்ளார் . அதில், , “நாங்கள் விரும்பிய நிலைக்கு வந்துவிட்டோம். அனைவரும் அரையிறுதியில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர். வெளிப்படையாக, ஒரு சிறந்த இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். அத்தகைய சூழ்நிலையில் இருக்க நாங்கள் விரும்புகிறோம். இந்தியா-பாகிஸ்தான் இடையே டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறாமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். “பாருங்கள், நாங்கள் நிச்சயமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இறுதிப் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை “இந்தியா மிகவும் வலிமையான அணி என்றார்.
மேலும் டேவிட் மலான் மற்றும் மார்க் வுட் ஆகியோருக்கு ஏற்பட்ட காயம் குறித்தும் பேசினார். “மாலன் மற்றும் வூட் இருவருமே ஆடுவது சந்தேகம் தான். ஆனால் போட்டி நாளில் (இன்று) அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்போம். அவர்கள் குணமடைய முழு நேரத்தையும் கொடுப்போம். நாளை (இன்று) மீண்டும் அவர்களை சோதித்து, மலான் & வூட் இருவரும் முழுமையாக குணமடைந்துவிட்டார்களா என்று பார்ப்போம். அதன்படி, அவர்களை விளையாடும் லெவன் அணியில் சேர்ப்பது குறித்து நாங்கள் அழைப்போம் என்றார்..
தொடர்ந்து எங்கள் மருத்துவக் குழுவை நாங்கள் நம்புகிறோம். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்கள் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு திரும்பிய நாங்கள் நிறைய இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம், அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஃபில் சால்ட் ஒரு அற்புதமான மனநிலையைக் கொண்டவர், குறிப்பாக டி20 போட்டிகளுக்கு அவர் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்றார்..
அதாவது, டேவிட் மலானுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால் அதற்கு பதிலாக பில் சால்ட் களமிறங்குவார் என தெரிகிறது.. அதேபோல வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் கால் தசை விறைப்பு காயம் காரணமாக களமிறங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. எனவே அவருக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டனை களமிறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரு முக்கிய வீரர்கள் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவா என்பது போட்டியின்போது தான் தெரியும்..