Categories
சினிமா தமிழ் சினிமா

வெறுப்பு மட்டும் தான் கிடைக்குது….. இதில் கேலி வேறு…. வேதனையோடு ராஷ்மிகா போட்ட‌ பதிவு…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமாவில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு புஷ்பா படத்திற்கு பிறகு நடிகை ராஷ்மிகாவுக்கு பல மொழிகளில் இருந்து பட வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ராஷ்மிகா மிகவும் வருத்தப்பட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த சில நாட்களாகவே என்னை பற்றி இணையதளத்தில் மற்றும் நேர்காணலில் பேசப்படும் விஷயங்களால் நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். நான் சொல்லாத விஷயங்களை கூட சொன்னதாக சிலர் கூறுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. நான் சினிமாவில் நடிக்க ஆரம்பத்திலிருந்து பல்வேறு விதமான வெறுப்புகளை சந்தித்து வருகிறேன். என்னைப் பற்றி இணையதளத்தில் ட்ரோல் செய்வதும் விமர்சிப்பதுமாகவே இருக்கிறது.

இது போன்ற ஒரு துறையை தான் நான் தேர்வு செய்திருக்கிறேன். எல்லோரும் நேசிக்கப்படும் ஒருவராக என்னால் இருக்க முடியாது என்பது உண்மைதான். அதற்காக என்னைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை பரப்புவது சரி கிடையாது. நான் ஒவ்வொரு நாளும் மற்றவர்களை எப்படி மகிழ்விக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். நான் என்னையும் என்னை சார்ந்தவர்களையும் பெருமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் நான் சொல்லாத சில பொய்யான தகவல்களை வைத்து என்னை கேலி செய்வது வருத்தமாக இருக்கிறது. என்னை பற்றிய விமர்சனங்கள் நியாயமானதாக இருந்தால் கண்டிப்பாக அதை நான் ஏற்றுக் கொள்வேன். என்னை சுற்றி இருப்பவர்களிடமிருந்து எனக்கு அன்பு கிடைக்கிறது. நான் என்னால் முடிந்தவரை கடுமையான உழைப்பை வெளிப்படுத்துகிறேன். மேலும் மக்களை மகிழ்விப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

 

 

Categories

Tech |