செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், இந்த மாவட்டங்களில் குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டம் எல்லாமே வடிகாலாக தான் இருக்கின்றது. எங்கே மழை பெய்தாலும் அங்கே தான் தண்ணீர் போகும். அப்படி தாழ்வான பகுதி. வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை எந்த மழை வந்தாலும் எங்கே வந்தாலும் அங்கே தண்ணீர் தேங்கும்.
நெல்லூரில் மழை பெய்தால் வெள்ளம் கடலூரில் வரும், ஊட்டியில் மழை பெய்தாலும் கடலூருக்கு தான் வரும், தர்மபுரி எங்கே பெய்தாலும் அங்கு தான் தண்ணீர் வரும். அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இப்போது சேட்டிலைட் மேப் எல்லாமே இருக்கிறது. அதை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தி பேரிடர் மாவட்டமாக தொடர்ந்து அறிவிக்கனும். வருடா வருடம் மழை பெய்யும், பயிர் முழுகும் முதலமைச்சர் போவர்.
அங்கே போய் பார்த்துவிட்டு, போட்டோ எடுத்து வருவார். அடுத்த வருடம் அதுதான் நடக்கும், அதற்கு அடுத்த வருடமும் இதுதான் நடக்கும், அதற்கு என்ன தீர்வு என்று அறிவியல் பூர்வமாக சிந்தித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மழை வருவதற்கு முன்பே தூர் வாருவது, தடுப்பணை கட்டுவது எல்லாமே மாத்தி மாத்தி செய்ய வேண்டும்.
சென்னையில் உள்ள மழை நீர் வடிகால் வருடம் வருடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது சென்னைக்கு சேட்டிலைட் மேப்பிங் செய்து, எந்த தெருவில் எவ்வளவு மழை பெய்யும் ? எவ்வளவு தண்ணீர் நிற்கும் என்று தகவல்கள் வைத்திருக்கிறார்கள். இப்போது மட்டுமல்ல 20 வருடமாகவே இந்த தகவல்களை வைத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ப மழை நீர் வடிகால் போவதை மழை தொட்ங்கும் முன்பே கட்டி, அதை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.