சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”.
தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் உருவாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். சிவலிங்கா கிருஷ்ணா தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, இந்த படத்தில் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், சண்டைக் காட்சிகளில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது. மிகவும் விரும்பி நடித்ததாகவும் சண்டைக்காட்சிகளில் நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என கூறியிருக்கிறார். ஆக்ஷன் டைரக்டர் யானிக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறினார்.