Categories
கல்வி

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம்….. தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததன் காரணமாக அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஐஏஎஸ் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளை போன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்ததன் காரணமாக தனியார் கல்லூரிகளின் கட்டண வரம்பை நியமிப்பதற்காக அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண வரமுறையை வெளியிடுவதுடன், ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தி தனியார் கல்லூரிகளுக்கு கட்டணம் குறித்த ஆலோசனை களையும் வழங்கும். கடந்த வருடத்தில் கூட தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் வந்துள்ளதாக அதிகாரி தன்னுடைய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் மருத்துவக் கல்லூரியின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், மெடிக்கல் கவுன்சில் போன்றவைகளின் விதிகளின் படி தான் மருத்துவக் கல்லூரிகள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அதை மீறி செயல்படக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |