Categories
மாநில செய்திகள்

அசத்தல்!!… தமிழகத்தில் “இவர்களுக்கு எல்லாம் மின்கட்டணம் குறைப்பு” ….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.9.2022 முதல் மின் கட்டண ஆணை என். 7/22, படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின் படி  சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் ஒரு நாளின் உச்சபட்ச பயன்பாடு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்கும் படி பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில்  சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை ஏற்று குறைந்த அழுத்த மின் இணைப்பு (LOW Tension III- B) கொண்ட அதிக பயன்பாடு நேரத்தில வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மின் கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |