Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

whatsapp-ல் ஆபாச குறுந்தகவல் அனுப்பிய நபர்…. அதிர்ச்சியடைந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் கணபதி மில் காலணியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வீடு வீடாக சென்று தண்ணீர் கேன் போடுவதால் 30 வயது பெண்ணின் செல்போன் எண் செல்வக்குமாரிடம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களாக செல்வகுமார் பெண்ணின் செல்போனுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் செல்வகுமாரை பலமுறை கண்டித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் ஆபாசமாக பேசி குறுந்தகவல் அனுப்பியதால் பாதிக்கப்பட்ட பெண் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |