கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள ஏழை நாடுகளுக்கு சுமார் 86, 400 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கும் நிலையில், 3200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் கொரோனா பரவியுள்ள பெரும்பாலான நாடுகள் ஏழ்மை நிலையில் உள்ளவை என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதிய நிதியின்றி தவிக்கின்றன.
இந்த நிலையில் நிதியின்றி தவிக்கும் நாடுகளுக்கு கை கொடுக்கும் வகையில் உலகவங்கி 86,400 கோடி ரூபாய் தொகையை ஒதுக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ் (David Malpass), இந்த நிதி அவசர உதவியாக கருதப்படும் என்றும், கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ள ஏழை நாடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்றும் கூறினார்.