சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று சரவெடி தயாரிக்கும் பணி நடைபெற்றது. காலை முதல் தொழிலாளர்கள் வழக்கம்போல வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது சரவெடிக்கு ரசாயன மருந்து கலவையை உள்ளே செலுத்தும் போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதில் குருசாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முனியாண்டி என்ற தொழிலாளி 80 சதவீத தீக்காயங்களுடன் தற்போது சிவகாசி அதிநவீன சிகிச்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த விபத்தில் மூன்று அறைகள் தரை மட்டமாகின.இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றார்கள்.