திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரலில் நிறுத்தப்பட்டிருந்த நேரடி இலவச தரிசன டோக்கன்கள், மீண்டும் நவம்பர் 1 முதல் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நவம்பர் 11ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் பலருக்கு திருப்பதி போகும் வழக்கம் உண்டு. அவர்கள் நவம்பர் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு https://tirupatibalaji .ap.gov.in/#/login என்ற இணையதளத்தில் 1300 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.