Categories
சினிமா தமிழ் சினிமா

“பத்தல பத்தல” பிரபல நடிகையுடன் செம குத்தாட்டம் போட்ட நடிகர் கமல்…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ…..!!!!!

தமிழ் சினிமாவில் 4 வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கமல்ஹாசன் தற்போது வரை முன்னணி ஹீரோவாக ஜொலிக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் 234-வது திரைப்படத்தை நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்தினம் இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு, ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அண்மையில் தன்னுடைய 68-வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவின் போது கமல் திரையுலக பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்திருந்தார். அந்த பார்ட்டியின் போது ராதிகா சரத்குமாருடன் பத்தல பத்தல என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் ஆடியிருந்தார். ‌ இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் கமல் ஒரு பெண்ணுடன் டான்ஸ் ஆடிய வீடியோவும் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |