பொதுவாகவே வங்கியில் கடன் வாங்குவதற்கு கிரெடிட் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்களைக் கொண்டது. இந்த கிரெடிட் ஸ்கோர் பயனாளர்களின் நிதி நடவடிக்கைகளை பொறுத்தே ஏற்ற இறக்கத்தை சந்திக்கும். இதனை சரி பார்ப்பது என்பது வாடிக்கையாளர்களுக்கு சிக்கலான செயலாக உள்ளது. இதனை எளிதாக்கும் வகையில் எக்ஸ்பீரியன்ஸ் இந்தியா நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் ஒருவரின் கிரெடிட் அறிக்கையை உடனடியாக சரி பார்ப்பது அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சரி செய்வதற்கு உதவும். இதன் மூலமாக மோசடிகள் எதுவாவது நடந்தால் அதனை எளிதில் கண்டறிந்து விடலாம்.
அதேசமயம் தனிநபர் தனது கிரெடிட் காரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். தற்போது கிரெடிட் ஸ்கோரை எளிமையான முறையில் உடனடியாக சரி பார்ப்பதற்கு இந்த நிறுவனம் புதிய வசதி ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் 48 மில்லியன் கணக்கான மக்கள் whatsapp செய்தியை பயன்படுத்தி வரும் நிலையில் whatsapp மூலமாக தங்களின் கிரெடிட் ஸ்கோர் உடனடியாக சரிபார்த்துக் கொள்ள வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.