தமிழகத்தில் கலந்த அக்டோபர் 31ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்க கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இந்த தாலு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால் நவம்பர் 13ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், காஞ்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், ராமநாதபுரம், நாகை, தென்காசி,நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.