Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “விக்ரம்” படத்திற்கு உலகநாயகனுக்கு கிடைத்த லாபம்…. உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்…. வைரல் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் இயக்கியதன் மூலம் அறிமுகமானவர்கள் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாக ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. உலகம் முழுவதும் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் நடப்பு ஆண்டில் அதிக வசூல் படைத்துள்ள படங்களின் பட்டியலிலும் “விக்ரம்” இடம் பெற்றுள்ளது. அதாவது, முதல் இடத்தில் அஜித்தின் வலிமை, இரண்டாவது இடத்தில் கே.ஜி.எஃப் 2 பெற்றுள்ள நிலையில் விக்ரம் படம் 3 வது இடத்தை பெற்றது.

இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஏஜென்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில் கழகத் தலைவன் படத்தின் ப்ரோமோஷனில் பிஸியாக இருக்கும் உதயநிதி விக்ரம் படத்தின் வெற்றி குறித்து பேசி பேசி உள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில், விக்ரம் படம் வெளியான பிறகு டிக்கெடுக்கு 4 வாரம் வரைக்கும் பிரஷர் இருந்தது. 2 வது, 3 வது வாரத்தில் எல்லா திரையரங்குகளிலும் காட்சிகள் அதிகப்படுத்தி வேற படமே வேண்டாம் என்று சொன்னாங்க. அது வேற மாதிரி ஹிட்டு, கமல் சாருக்கு மிகப்பெரிய லாபம். சொல்லப்போனால் இன்டஸ்டிரியோடு பெரிய ஹிட் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |