தமிழ் சினிமாவில் மாநகரம் இயக்கியதன் மூலம் அறிமுகமானவர்கள் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாக ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜ் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் ஒரு நிமிஷம் லோகேஷ் கனகராஜ் வந்து தலை காட்டிய நிலையில் தற்போது சலூன் படத்தில் முக்கியமான ரோலில் நடிப்பதாக வெளிவந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இது உண்மையான தகவலா? இல்ல வதந்தியா? என்பது இன்னும் தெரியவில்லை.