கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் கார் வெடித்து ஜமேஷா முகின் என்பவர் உயிரிழந்தார். அந்த வழக்கில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை என் ஐ ஏ விசாரித்து வரும் நிலையில் கோவை கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழக முழுவதும் 45 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் ஐந்து இடங்களில் போலீஸ் ஆர் தீவிர சோதனை நடத்திவரும் நிலையில் இந்த பட்டியலின் படி சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முழுவதும் 45 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் ஐந்து இடங்களில் தனியாக போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.