Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாச்சு!…. கைகலப்பில் முடிந்த பொன்னியின் செல்வன் சக்ஸஸ் பார்ட்டி…. வருத்தத்தில் இயக்குனர் மணிரத்தினம்….!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று உள்ளது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனை செய்து வருகிறது. மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் வெற்றியை கொண்டாட ‘சக்சஸ் பார்ட்டி’ ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. இதில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்கள் உள்ளிட்ட ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது மணிரத்தினத்தின் பெண் உதவியாளரிடம் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதால் அங்கு தகராறு ஏற்பட்டது. அந்த நபரை அடித்து அங்கிருந்து வெளியே அனுப்பி விடப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது‌. மேலும் இந்த சம்பவத்தால் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் லைகா நிறுவனம் சுபாஷ்கரன் வருத்தத்தில் இருப்பதாக தகவல் பரவுகிறது.

Categories

Tech |