Categories
மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட வெப்ப நிலை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

முக்கிய மாவட்டமான மதுரை, திண்டுக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரித்து காணப்படும் என குறிப்பிடப்பட்டது. சென்னையை பொருத்தவரை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.  இதன்காரணமாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள்  வெளிய வரும் போது பாதுகாப்பாக வருமாறு தெரிவித்தனர்.

Categories

Tech |