செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் இருந்து வெளியேறனும் 90% மக்கள் நினைக்கிறாங்க., 99% என்றும் சொல்லலாம். இதற்காக பெரிய அளவில் மாநில மாநாடு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நடத்தத்து. ஜூலை இரண்டாம் தேதி சங்கரன்கோவில் நடத்துறாங்க. அக்டோபர் 9ஆம் தேதி பட்டியலில் இருந்து வெளியே போகணும்னு சொல்லி கன்னியாகுமரி மாவட்டம் முதல் சென்னை வரைக்கும் நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன். பல லட்சம் மக்களை அழைத்து, இங்கிருந்து நடந்து போறோம்.
ஏழை எளிய மக்கள் ரொம்ப பாதிக்கிற விஷயம் தான் மின்சார கட்டணம், பால் விலை. முட்டை விலை ஏழு ரூபா. ஏழை எளிய மக்கள் முட்டையை சாப்பிட முடியாத அளவுக்கு ஆகி போயிடுச்சு. இதெல்லாம் பெரிய அநியாயம்னே சொல்லலாம். ஏன்னா பள்ளி குழந்தைகளுக்கு மூணு முட்டை கொடுக்கப் போறோம், அதுக்காக வந்து ஏழு ரூபாய் ஏத்துறோம்னு சொன்னா… இது யாரை ஏமாற்றுவதற்கு… முட்டை விலை, பால் விலை உயர்வு எல்லாம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய கருத்து, மக்களுடைய கருத்தும் அது தான்.
எல்லாருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன்னு சொன்னாங்க. எக்கச்சக்கமான விஷயங்கள் சொன்னாங்க. டாஸ்மார்க்கை முதல் கையெழுத்து போட்டு முடுவோம்னு சொன்னாங்க. ஏதாவது செஞ்சோம்னு ஒன்னை சொல்லுங்களேன். தமிழகத்தில் இளம் விதைவைகள் எவ்வளவு என சென்சஸ் தான் எடுக்கணும்.இளம் விதவைகள் இல்லை என்றால் சந்தோஷம்தான் என தெரிவித்தார்.