பிரிட்டன் அரசு தங்கள் நாட்டு மக்களை நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீட்க 32,000 ரூபாய் உதவித்தொகையை அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
பிரிட்டன் நாட்டில் வசிக்கும் மக்கள் லட்சக்கணக்கானோர் குறைவான வருவாய் பெற்று, தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்படுகிறார்கள். எனவே, அவர்களின் நெருக்கடியை தீர்க்கும் வகையில் அரசாங்கம் 32,000 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளது. மொத்த உதவித்தொகை 65,000.
இதில் முதல் தவணையானது, முன்பே மக்களுக்கு செலுத்தப்பட்டுவிட்டது. இந்த உதவி தொகையானது, வேலைகள் மற்றும் ஓய்வூதியத்துறை மூலம் வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகையை பெற மக்கள் எந்த கஷ்டமும் பட தேவையில்லை. எனினும், மோசடி செய்பவர்களிடம் மட்டும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.
மக்கள் அவர்களின் வங்கி கணக்கு எண்களையும், கடவுச்சொல் எண்களையும் யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் எரிசக்தி கட்டணத்தில் ஆண்டுதோறும் 40 ஆயிரம் ரூபாய் வரை குறைவான வருவாய் பெறும் மக்களுக்கு மானியம் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.