வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் இன்று கனமழையும் 11 மற்றும் 12ம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 13ஆம் தேதி ஓரிரு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அநேக இடங்களிலும் 11,12,13ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நவம்பர் 12ஆம் தேதி நீலகிரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories