செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சில நேரத்தில் காவல்துறை கடுமையாக தான் இருக்கணும். பாரதிய ஜனதா கட்சி காவல்துறையினர் கடுமையாக்கும் போது கூட இருப்போம். காவல்துறை கடுமையாச்சுனா அதுக்கு ஒரு குரூப்… ஐயோ காவல்துறை ஏன் கடுமையா நடந்துக்கிறாங்க ? கடுமையா நடந்துக்க கூடாது அப்படின்னு…
மனித உரிமை மீறல் என ஒரு குரூப் வருவாங்க. இந்த விஷயத்தில் காவல்துறை கடுமையாக இல்லை என்றால், நாளைக்கு நீங்களும், நாங்களும், சாமானிய பெண்கள் கூட ரோட்டில் நடந்து செல்ல முடியாது. அதனால எங்களுடைய ஒரே கோரிக்கை காவல்துறை சில இடங்களில் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்.
ஓல்ட் ஸ்டைல் போலீஸ் என்று சொல்லுவார்கள். இந்த நேரத்தில் அதுதான் தேவைப்படுகிறது. எனவே அரசு, இவங்க செய்யல, அவங்க செய்யல அப்படின்னு சொல்றதை விட்டுவிட்டு, காவல்துறையின் கையை கட்டவிழ்த்து விட்டு, சில விஷயங்களை தைரியமா பண்ண சொல்லுங்க. சமுதாயத்தில் அது பண்ணலைனா… சமுதாயம் என்று ஒன்று இருக்காது. அதனால் தமிழக அரசுக்கு எங்களுடைய வேண்டுகோள்… காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்க என தெரிவித்தார்.