பிரபல சந்தையில் காய்கறி விலை குறைந்துள்ளது.
சென்னையில் மிகவும் பிரபலமான கோயம்பேடு சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் லாரிகள் மூலம் காய்கறிகள் தினமும் இறக்குமதி செய்யப்படும். இங்கிருந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.
மேலும் இங்கு நிர்ணயிக்கப்படும் காய்கறி விலையைப் பொறுத்து சென்னை மட்டும் இல்லாமல் பக்கத்து மாவட்டங்களிலும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று காய்கறிகள் விலை குறைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் பீன்ஸ் ஒரு கிலோ அதிகபட்சமாக 30 ரூபாய்க்கு, பீட்ரூட் 50 ரூபாய்க்கும், பாகற்காய் 35 ரூபாய்க்கும், சுரைக்காய் 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 20 ரூபாய்க்கும், முட்டைக்கோசு 10 ரூபாய்க்கும், குடைமிளகாய் 45 ரூபாய்க்கும், கேரட் 40 ரூபாய்க்கும், காளிபிளவர் ஒன்று 30 ரூபாய்க்கும், தேங்காய் ஒன்று 25 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் 8 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 65 ரூபாய்க்கும், கருணைக்கிழங்கு 30 ரூபாய்க்கு, இஞ்சி 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 25 ரூபாய்க்கும், வாழைக்காய் 8 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 30 ரூபாய்க்கு, எலுமிச்சை 40 ரூபாய்க்கும், மாங்காய் 60 ரூபாய்க்கும், வெங்காயம் 36 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் 100 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 35 ரூபாய்க்கும், முள்ளங்கி 10 ரூபாய்க்கும், அவரைக்காய் 45 ரூபாய்க்கும், புடலங்காய் 25 ரூபாய்க்கும், தக்காளி 20 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.