Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvENG : கோலி, பாண்டியா அரைசதம்…! இங்கிலாந்து அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா..!!

இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா..

டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 168 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக  இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா, கோலி அரை சதம் அடித்துள்ளனர். தொடக்க வீரர்கள் சொதப்பியபோதும் விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்களும், கடைசி கட்டத்தில் அதிரடியாக பாண்டியா 33 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 63 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

 

Categories

Tech |