ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் பேர்னி நானி தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அரியணையில் ஏறியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி மற்றும் அதிரடி திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவே பாராட்டும் முதல்வராக திகழ்கின்றார்.இவர் இதுவரை மேற்கொண்ட பல திட்டங்கள் பல்வேறு மாநில மக்களை ஈர்த்ததது.
இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் 26 லட்சம் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் பேர்னி நானி தெரிவித்துள்ளார். தெலுங்கு புத்தாண்டு தினத்தை கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட இருக்கின்றது. உகாதி என்று அழைக்கப்படும் இந்த தினத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.