Categories
தேசிய செய்திகள்

திருமண ஆடை வங்கி: ஒரு ரூபாய் கூட வேண்டாமா?… சென்னையிலும் இருந்தா சூப்பரா இருக்கும்?….!!!!

கேரளா இராட்டுப்பேட்டா பகுதியிலுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு அதிரடி வேலையை செய்து இருக்கின்றனர். அதாவது திருமண ஆடை வங்கி எனும் ஒன்றை உருவாக்கி, அது குறித்த தகவல்களை பல பேருக்கும் பரப்பி வருகின்றனர். முதல் முதலில் வெறும் 3 பேர் யோசித்து இத்திட்டத்தை செயல்படுத்திய நிலையில், படிப்படியாக இந்த குழு 10 பேராக மாறி தற்போது இதில் 250 பேர் இணைந்து உள்ளனர்.

இவர்கள் ஒரு வாட்ஸ் அப் குழுவை அமைத்து, திருமண ஆடைக்காக மிகப் பெரிய அளவில் செலவிடமுடியாத ஏழை-எளிய பெண்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். இவற்றில் சிறந்த விஷயம் என்னவெனில் அந்த ஆடை வங்கியில் இருந்து அவர்கள் திருமணத்திற்குப் பயன்படுத்தக்கூடிய ஆடைக்காக ஒரு ரூபாய்கூட செலவு செய்யவேண்டாம். அத்துடன் திருமண ஆடையை திரும்பக்கொண்டு வந்து கொடுப்பதும், இல்லை அவர்களே வைத்துக் கொள்வதும்கூட அவர்கள் விருப்பம்தானாம்.

ஆகவே ஆடையை கொண்டுவந்து கொடுக்கவேண்டும் என்பதும் கட்டாயமில்லை. இதுவரையிலும் 25 ஏழை-எளிய குடும்பத்துக்கு இந்த வங்கி உதவி இருக்கிறது. மேலும் இக்குழுவை பற்றி தகவலறிந்து பெரும்பாலானோர் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் தங்களது திருமண ஆடையை இங்கே கொண்டுவந்து கொடுத்துவிட்டார்களாம். அத்துடன் சில பேர் புதியதாக சில ஆடைகளை வாங்கி வந்தும் நன்கொடையாக அளித்திருக்கின்றனர். இதை சிந்தித்து தொடங்கி இருக்கும் சமூக ஆர்வலர் மெஹரூஃப் கூறியதாவது, வாட்ஸ்அப் வாயிலாக எங்களைத் தொடர்புகொள்வோரிடம் விபரங்களைப் பெற்றுக்கொண்டு கடைக்கு வரச் சொல்கிறோம்.

மற்றக் கடைகளைப் போன்றே இங்கு வந்து அவர்கள் விரும்பும் ஆடைகளை தேர்வுசெய்து கொள்ளலாம். அவர்களது விபரங்கள் யாருக்கும் எங்கும் தெரிவிக்கப்படாது என்று கூறினார். இதுபோல் சென்னை உள்ளிட்ட மிகப் பெரிய நகரங்களிலும்கூட இந்த திருமண ஆடை வங்கியைச் செயல்படுத்தினால் எண்ணற்றவர்களுக்கு பயனாகவும் இருக்கும் என்றும் பயன்படுத்தாமல் இருக்கும் எண்ணற்ற திருமண ஆடைகளுக்கு வெளிச்சம் பிறக்கும் என்றும் பொதுவாகக் கூறப்படுகிறது.

Categories

Tech |