Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஹிமாச்சல் பிரதேச தேர்தல் 2022: ஜேபி நட்டா முன்னிலையில்…. பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்….!!!

இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்றோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

இதற்கிடையில் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸின் மூத்த தலைவரான ஹர்திக் சிங் ரத்தன் ஜேபி நட்டாவின் இல்லத்திற்கு சென்று அவருடைய முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்துள்ளார். இவர் ஹிமாச்சலின் சிர்மருர் மாவட்ட பொது செயலாளர் ஆகவும், காங்கிரஸ் சிறுபான்மை முன்னணி அமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |