இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தலை முன்னிட்டு பாஜக தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக, அதில் குறிப்பிட்டுருப்பதாவது, மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றினால் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கென்று நிபுணர் குழுவையும் அமைப்போம்.
அதிகாரம் இளைஞர்களுக்கு வழங்கப்படும். அரசு பணியாளர்களுக்கு மரியாதை வழங்கப்படும். கூடுதலாக ஐந்து மருத்துவக் கல்லூரிகளை கட்டுவோம். அரசாங்க பணியாளர்களின் ஊதியத்தில் இருக்கும் வேறுபாடுகள் நீக்கப்படும். அரசாங்க பணியில் பெண்களுக்கென்று 33% இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
ஆறாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக மிதிவண்டி அளிக்கப்படும். 8 லட்சம் நபர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.